Gaja Cyclone Relief Fund
கஜா புயல் - ரிப்போர்ட்
ஏற்பாடு: MMT & Sakya charitable Trust
உதவி: அனைத்து மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ‘BNI champions ‘Trichy.
24.11.18 சனி, காலை சரியாக 7.00 மணிக்கு உறையூர் ‘ஆரோக்யா மருத்துவமனை’யில் இருந்து மழை மற்றும் மேகமூட்டத்துடன் உள்ள சூழ்நிலையில்
இரண்டு ‘டாடா ஏஸ்’ வாகனம் (ஒன்றில் அரிசி மற்றொன்றில் பொருட்கள்) + 5 சொந்த கார்களிலுமாக மொத்தம் 29 பேர் ‘கஜா’ புயல் நிவாரணப்பொருட்களுடன் ‘பேராவூரணி பகுதிக்கு’ சென்றோம்.
போகும் வழியெங்கும் மரங்கள், தென்னந்தோப்புகள் கொத்து கொத்தாக சாய்ந்து கிடந்ததை பார்க்கையில் ‘மார்ச்சுவரி’யில் வரிசையாக உடல்களை கிடத்தி வைத்ததுபோல இருந்தது.
பலகாலமாக ஊரின் அடையாளமாக ரோட்டோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து ‘தேர் கவிழ்ந்தது போல’ காட்சி தந்தது.
மின்கம்பங்கள் பாதியில் முறிந்தும், முழுதும் சாய்ந்தும் மின்கம்பிக்கள் ரோட்டோரமாக ‘பிரண்டை சேடிகள்’ மிதிபடுவது போல மிதிபடுகிறது.
அங்கங்கே ஒரு மினி லாரிகள் அதைச்சுற்றி கொடுப்பதை வாங்க சிறு கூட்டம், பல வண்டிகளில் தண்ணீர், பிஸ்கட் போன்றவை மக்களை நோக்கி வீசுகிறார்கள்.
இலவசமாக எதை கொடுத்தாலும் அடித்து பிடித்து வாங்க பழக்கப்பட்டவர்கள் ஆச்சே..பாவம்.
மெடிக்கல் கேம்ப் - அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் சிறு பகுதிகளுக்கும் சென்று சிகிச்சையை சிறப்பாக செய்துகொண்டு இருந்தார்கள்.
நாங்கள் சென்ற பகுதிகள்...
1.கோட்டைக்காடு (பேராவூரணி) - என்ற பகுதிக்கு செல்லும் வழியில் பல நாட்கள் எவ்வளவு வெயில் அடித்தாலும் தெரியாதபடி அடர்ந்த தென்னந்தோப்பு இருந்து, அது அப்படியே சாய்ந்து ‘வெளீர்’ என்று இருந்தது, உள்ளே இருந்த பங்களாவும் சிறிய சேதாரத்துடன் பளிச்சென்று ‘தனியாக’ தெரிந்தது.
எத்தனை ஆண்டுகள் தண்ணீர் பாய்ச்சி பராமரித்த மரங்கள், தற்பொழுது ‘தென்னங்குலைகளுடன்’ அப்படியே சாய்ந்து கிடக்கிறதே!? அட டா..
எனக்கு ‘அந்த கிராமத்து’ பழமொழி ஞாபகம் வந்தது - ‘உன்னை பெத்து வளத்ததுக்கு ஒரு தென்னம்பிள்ளையை வளர்த்திருந்தால் கூட பயன்தரும்’ என்பார்கள்.
பெற்றபிள்ளைக்கு சமமான இந்த தென்னையை வளர்த்து பயன் தந்து கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரேநாளில் ‘கஜா’ கொலை செய்துவிட்டதே..!
இது அந்தகாலத்தில் ஒரே நாளில் கொத்து கொத்தாக மனிதர்களை ‘கழுவேற்றி கொன்றதுபோல’ அல்லவா உள்ளது.
இந்த தென்னையை பொருத்தவரை - முதலாளி (உண்மைத்தாய்) - பணமும் போச்சு, ஆசையாக உருவாக்கியதும் போச்சு,(பரிகாரம் கிடைக்கலாம்), கூழித்தொழிலாளி (வளர்ப்புத்தாய்) - தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தவன். ..ஆக இருவருக்கும் இழப்புதான்.
இத்தனை நாட்கள் ஆகியும் இறந்த ஆடு, சேதமான வீடு போன்றவற்றை அப்படியே வைத்து மானியம் பெற காத்திருப்பதும் , மேலும் மேலும் பலரிடம் இதைக்காட்டி உதவி கேட்பதும் ‘ஊனமுற்றவர்கள் போல நடித்து பிச்சை கேட்பது போலவும் உள்ளது’ ஆனால், உண்மையில் ஊனமுற்றவன் (பாதிக்கப்பட்டவன்) உதவி கிடைக்காமல் தவிக்கிறான்.
ஒரே தெருவில் இருவேறு இடங்களில் (சேர மாட்டார்களாம், உயிர் போகும் நிலையிலும் ‘நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன்!’ என்ற சாதி முக்கியம்..) உதவிப்பொருட்கள் வழங்கினோம். (உதவி: சகோ.துரைமாணிக்கம்)
மதியம் நல்ல ஓட்டல் இல்லாததால் ரோட்டோரக்கடையில் ‘பரோட்டா’ சாப்பிட்டுவிட்டு புறப்பட்டோம்.(கரண்ட் இல்லை அல்லவா).
2.முனுமக்காடு (குருவிக்கரம்பை) - மிகவும் பாதித்த பகுதி, போகும் வழியில் கூட்டமாக ஆர்ப்பறித்தது ஒரு கும்பல் (வழியில் உதவிசெய்ய வருபவர்களிடம் மொத்தமாக வாங்கிக்கொண்டு சுருட்டுவது), நாங்கள் அதையும்தாண்டி உள்ளே ஒரு தெருவுக்குள் சென்றோம், அங்கே ‘தர்மபுரியில் இருந்துவந்து மருந்துகளுடன் இரு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தனர்’. நாங்கள் பல மருத்துவர்கள்
உதவிப்பொருட்களுடன் வந்ததில் அவர்களுக்கு ஆச்சரியம். எங்களது உதவி அவர்களுக்கு முமுமையாக (அந்த பகுதி) முதல்முறையாக கிடைத்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ‘தமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஒருசிலருக்கு கிடைத்துவிடக்கூடாது’ என்பதில் சிலர் கவனமாக இருக்கின்றனர்..ஆகா..என்று பிரமித்துவிட்டேன்.
3.வீரியங்கோட்டை - 100 குடும்பங்கள் இருப்பதாக லிஸ்ட்டுடன் போனோம், 30 பேர் மட்டும் இருந்துகொண்டு ‘எல்லாவற்றையும் (100 பேருக்கான) கொடுங்கள், நாங்கள் பிரித்துக்கொள்கிறோம்’ என்ற வாதம் சரியாக படவில்லை, ஒரு மூட்டை அரிசியுடன் முடித்துக்கொண்டோம்.
4.பொன்காடு - மாலை 6.30 மணி, அதே போல ‘வழியில் இருக்கும் எங்களை தெரியலயா? - என்ற பிரச்சினை, இதற்கு முன்பு எந்த வாகனமும் எங்களைத்தாண்டி போகாது, நீங்க எப்படி போகலாம் என்ற வீம்பு. இங்கே அவ்வளவாக புயல் பாதிப்பும் இல்லை..ஆனாலும் இலவசம் பெற துடிப்பு.
5.நாட்டானிக்கோட்டை - இரவு 7.00 மணி, குறுகலான பாதையில் மிகுந்த சிரமத்திற்கு நடுவே தெருவுக்குள் சென்றோம். இந்த நேரத்தில் கரண்டே இல்லாத அடர்ந்த காட்டுக்குள் இருந்த உணர்வு, பின்பு நாங்கள் வைத்திருந்த மெழுகுவர்த்தி, கார் லைட் உதவியுடன் சுமார் 40 குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி பொருட்கள் கொடுத்துவிட்டு வந்தோம். (உதவி: சகோ.நீலகண்டன்)
5.பைங்கால் - இரவு 8.00 மணி, பாதிப்பு ஒரளவுதான், அவர்களுக்கு நாங்கள் போனதில் மகிழ்ச்சி (உதவி:சகோ.சுதாகர் சாக்யா)
இதில் ‘பைங்கால், பொன்காடு’ இரண்டு ஊர்களும் திடீரென முடிவெடுத்தது.
6.சொர்ணக்காடு - இரவு 8.45 மணி. நேரமாகிவிட்டாலும் எல்லோரும் வந்து பெற்றுச்சென்றனர். இங்கு தென்னந்தோப்பு ஓரளவு தப்பித்ததாக தகவல்.(உதவி: சகோ.பொன்னிவளவன்)
எல்லாம் முடிந்து வெளியே வரும்பொழுது (இரவு 9.30 மணி) மதுமயக்கத்தில் ஒரு கும்பல் வழிமறித்தது. மீதம் இருந்தால் கொடுக்கவேண்டும் என்ற கட்டளை வேறு..
இப்படி நாங்கள் புடைசூழ, தக்க உள்ளூர் நகர்களின் உதவியுடன் போயும்கூட “ உதவி செய்யபோய் உபத்திரத்தில் மாட்டிக்கொள்வோமோ..என்று திக் திக்” என்று இருந்தது.
என் கருத்து: இரட்டை சம்பளம் கொடுத்தோ, அதிநவீன கருவிகளை கொண்டோ உடனே அப்புறப்படுத்தி, இயல்பு நிலையை தாமதப்படுத்தி ‘இலவசம் , கேம்ப் ‘ என்று எந்த வேளையும் நடக்கவில்லை, எல்லோரும் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்களா? அல்லது அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையா? என்று புதிராகவே உள்ளது.
எதுவாயினும் நாம் எதையும் தாங்கும் பலம் பெறவேண்டும்.
- மரு.ந.பெரியசாமி சாக்யா